உழைப்பாளர் தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

3 hours ago 2

சென்னை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.எடப்பாடி பழனிச்சாமி(அதிமுக): உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் ‘மே’ தின நல்வாழ்த்துகள்.
முத்தரசன்(கம்யூனிஸ்ட்): பெரும்பான்மை மத பாசிசத்தை முறியடித்து, ஜனநாயகத்தை பாதுகாக்க மேதின நாளில் உறுதி ஏற்போம்.

செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்): பணமதிப்பிழப்பு, பொருத்தமற்ற சரக்கு மற்றும் சேவை வரி, பணவீக்கம் போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில், பொருளாதார பேரழிவு காரணமாக தொழிலாளர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில், குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும்.

ராமதாஸ்(பாமக): அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக போராடுவதற்கு இந்நாளில் பாட்டாளிகள் அனைவரும் உறுதியேற்போம்.

அன்புமணி (பாமக): தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணிக்காலம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தும் வழங்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி செகரட்டரி ஜெனரல் மூத்த தலைவர் பன்னீர்செல்வம்: உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும். அவர்கள் வளம் பெற வேண்டும் என்று இந்த மே தின தொழிலாளர் தினத்தில் உறுதி ஏற்போம்.

ஜி.கே.வாசன்(தமாகா): தொழிலாளர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்து அவர்களின் நலன் காக்க அனைவரும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

ஜவாஹிருல்லா(மமக) :தியாகம் செய்து பெற்ற உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று உரிமைகளைப் பெற்றுக் கொள்ள இந்த மே நாளில் உறுதியைமேற்கொள்வோம்.

வைகோ(மதிமுக) :போராடினார்கள். தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.

திருநாவுக்கரசர்(காங்கிரஸ்): நாட்டின் வளர்ச்சிக்கும் பலத்திற்கும், உயர்விற்கும், முன்னேற்றத்திற்கும் அஸ்திவாரமாக திகழும் தொழிலாளப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வாழ்த்துகிறேன்.

ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி): தொழிலாளர்களின் உழைப்பிற்கு, ஆண்டு முழுவதும் வியர்வை சிந்தி அயராது பாடுபடும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு மே தின நல்வாழ்த்துகள்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவர் சேம.நாராயணன்: நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம். அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர்: இனம், மதம், மொழி என்ற வேறுபாடின்றி அல்லும் பகலும் அயராது பாடுபடும் தொழிலாளர்களின் இதயங்களில் இன்பம் பொங்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

சென்னை கட்டுமான பொறியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் இன்ஜினியர் விஜயகுமார், ‘’மே தினம் போற்றும் உழைப்பாளர் தினத்தில் நாட்டை முன்னேற்ற பாதையில் தோள்கொடுத்து தூக்கி நிறுத்துகின்ற உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்’ என்றார்.

டாக்டர் வி.ஜி.சந்தோசம்: “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றார் மகாகவி பாரதியார்! தொழிலைப் பேணிக் காப்போம்! தொழிலாளர்களைப் போற்றிப் பாதுகாப்போம்! நாடு வளங்காண நாளும் நாளும் சலியாது உழைப்போம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், விஜய் வசந்த் எம்பி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏஎம்.விக்கிரமராஜா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன், நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன், இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் ஆ.ஹென்றி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவெலபேர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன், புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே.ராமச்சந்திரன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, இந்தியா நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் ஆகியோரும் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post உழைப்பாளர் தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article