உள்வர்த்தக விதிமுறை மீறல் அதானி மருமகன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? செபிக்கு காங். கேள்வி

1 week ago 3

புதுடெல்லி: தொழிலதிபர் கவுதம் அதானியின் மருமகனும் அதானி குழும நிறுவனங்களின் இயக்குனருமான பிரணவ் அதானி, விலை முக்கிய தகவல்களை பகிர்ந்து உள்வர்த்தக விதிமுறைகளை மீறியதாக செபி குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘அதானியின் பத்திர சட்டங்களை மீறியதற்கான விசாரணையை செபி முடிக்கும் என்று இந்திய மக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் அதானி குழும நிறுவனங்களின் இயக்குனராக இருக்கும் கவுதம் அதானியின் மருமகன் மிகமுக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதன் மூலமாக உள்வர்த்தகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். பிரதமரின் விருப்பமான வணிகக் குழுவை செபி சட்ட விதிகளுக்கு ஏற்ப வழக்கை விசாரிக்குமா?\\” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

The post உள்வர்த்தக விதிமுறை மீறல் அதானி மருமகன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? செபிக்கு காங். கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article