உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ.23ல் கிராம சபை கூட்டங்கள்: கலெக்டர் அறிவிப்பு

2 months ago 10

 

மதுரை, நவ. 20: மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ.23ல் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்த கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி பகுதியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். எனவே, மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ.23ல் கிராம சபை கூட்டங்கள்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article