உள்​ளாட்​சிகளில் பதவிநீக்​கம் செய்​யப்​பட்ட இடங்​களுக்கு தேர்​தல் நடத்​தப்​ப​டாது: தமிழக அரசு உத்தரவாதம்

2 weeks ago 4

சென்னை: பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு இப்போதைக்கு தேர்தல் நடத்த வேண்டாம் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி சென்னை மாநகராட்சி 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலரும், மண்டலத் தலைவருமான ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சித் தலைவரும், 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோரை பதவிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் 27-ம் தேதி உத்தரவிட்டார்.

Read Entire Article