திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோவை அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வாலிபருக்கு அனுப்பி வைத்த கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் மூணாறு அருகே நல்லதண்ணி பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. அந்த பகுதியில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
அப்போது இளம்பெண்ணுக்கு தெரியாமல் கணேஷ்குமார் வீடியோ எடுத்து உள்ளார். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்குமார், உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை இளம்பெண்ணுக்கு நிச்சயம் செய்த வாலிபருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் திருமணம் நின்று போனது. இதுகுறித்து மூணாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ் குமாரை கைது செய்தனர்.
The post உல்லாசமாக இருந்தபோது எடுத்த இளம்பெண் ஆபாச வீடியோவை மாப்பிள்ளைக்கு அனுப்பியவர் கைது appeared first on Dinakaran.