உலகளவில் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு

2 days ago 4

மும்பை,

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறார்.

மேலும், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதி்ப்பு முறையையும் டிரம்ப் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரி வித்துள்ளார். அதேபோல், பிற நாடுகளுக்கும் வரிவிதித்துள்ளார். டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் உலக அளவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் விபரம்;

உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!

* ஹாங்காங் - 8.7 சதவீதம் சரிந்தது

* சிங்கப்பூர் - 7 சதவீதம் சரிந்தது

* ஜப்பான் - 6 சதவீதம் சரிந்தது

* சீனா - 5.5 சதவீதம் சரிந்தது

* மலேசியா - 4.2 சதவீதம் சரிந்தது

* ஆஸ்திரேலியா - 4.1 சதவீதம் சரிந்தது

* பிலிப்பைன்ஸ் - 4 சதவீதம் சரிந்தது

* நியூசிலாந்து - 3.6 சதவீதம் சரிந்தது

இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருவதால், முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

 

Read Entire Article