
புதுடெல்லி,
இந்த சீசனுக்கான முதலாவது உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும், 2-வது உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பெரு தலைநகர் லிமாவில் ஏப்ரல் 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் நடக்கிறது. இந்த இரு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை, இந்திய தேசிய ரைபிள் சங்கம் நேற்று அறிவித்தது.
மனு பாக்கர் தலைமையிலான அந்த அணியில் 35 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, இஷா சிங், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சிப்ட் கவுர் சம்ரா, ஸ்ரீயங்கா சடான்ஜி, அர்ஜூன் பபுதா, ஆனந்த் ஜீத் சிங் நருகா, ரைஜா தில்லான், தமிழகத்தை சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் ஆகிய முன்னணி வீரர், வீராங்கனைகள் உள்பட 35 அணியில் இடம் பிடித்துள்ளனர்.