*அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அருகே உலக வன நாளில் தூவுவதற்காக அரசு பள்ளி மாணவர்கள் 3 மணி நேரத்தில் 1.30 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து அசத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் வேப்பன், ஆலம், அத்தி, புளியமரம், புங்கன், இலுப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விதை கொண்டு ஒரு லட்சத்து முப்பதாயிரம் விதை பந்துகள் மூன்று மணி நேரத்தில் தயார் செய்தனர்.
அடுத்த மாதம் உலக வன நாள் அன்று வனத்துறை இடம் வனப்பகுதியில் விதைப்பந்துகள் தூவுவதற்காக ஒப்படைக்க உள்ளது. மூன்று மணி நேரத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரித்ததற்காக, ஒண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் சான்று கேடயம் பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்மநாதன் இடம் வழங்கினர். உடன் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆரிநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
The post உலக வன நாளில் தூவப்படுகிறது 3 மணி நேரத்தில் தயாரான 1.30 லட்சம் விதைப்பந்துகள் appeared first on Dinakaran.