உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா காலிறுதிக்கு தகுதி

2 months ago 15

மான்ட்பெல்லிர்,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் போட்டி பிரான்சில் உள்ள மான்ட்பெல்லிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா , தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்சை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 11-9, 6-11, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் பெர்னாடெட் சோக்சை (ருமேனியா) வீழ்த்தி மணிகா பத்ரா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் மணிகா பத்ரா, சீனாவின் கியான் தியானியை எதிர்கொள்கிறார்.

Read Entire Article