
படுமி,
பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடர் 6 சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டியை கொண்டது.
இதில் இந்திய வீராங்கனை தமிழகத்தை சேர்ந்த வைஷாலி 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கரிசா யிப் உடன் மோதினார். இதில் வைஷாலி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ஹரிகா துரோனவள்ளி, கிரீசின் ஸ்டாவ்ரூலா சோலகிடோவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.