உருளைக்கிழங்கு ஜிலேபி

15 hours ago 4

தேவையானவை:

உருளைக்கிழங்கு – ½ கிலோ,
தயிர் – 1 கப்,
ஆரோரூட் பவுடர் – 50 கிராம்,
நெய் – 5 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – ¼ கிலோ,
ஜிலேபி பவுடர் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை நீக்கி, அதனுடன் ஆரோரூட் மாவு, தயிர் சேர்த்து கெட்டியாக பிசையவும். சர்க்கரையை பாகு காய்ச்சி, இறுகி வரும் போது ஜிலேபி பவுடரை சிறிது நீரில் கரைத்து, அதில் ஊற்றிக் கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும், உருளைக்கிழங்கை மாவினை முறுக்கு பிழிவது போல வட்டமாகப் பிழிந்து இருபுறமும் சிவக்க வெந்ததும் தனியாக வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும்.

The post உருளைக்கிழங்கு ஜிலேபி appeared first on Dinakaran.

Read Entire Article