உயர்ரக கிளிகளை திருடி விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது - சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்

5 months ago 35
சென்னை, கொளத்தூரில் அயல்நாட்டு பறவைகளை விற்பனை செய்யும் கடையில் கிளி வாங்குவது போல் வந்து 3 லோரி ரெட் வகை கிளிகளை திருடி விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிளிகளை திருடியவர்கள் 35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிளியை, 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தொடர்பு எண்ணையும் பகிர்ந்துள்ளனர். இதனை அறிந்த கடையின் உரிமையாளர் அரவிந்த் ரமேஷ், கிளியை வாங்குவது போல் விலை பேசி அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் அருகே வரவழைத்தார். அங்கிருந்த போலீஸார், 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்து அவர்களிடமிருந்து 3 கிளிகள், டூவீலரை பறிமுதல் செய்தனர். மது அருந்த பணம் இல்லாததால் கிளியை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முயன்றதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article