உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை - புதுச்சேரி அரசு அறிவிப்பு

6 hours ago 2

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதல்-அமைச்சர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார். அவர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

  • விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.
  • அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
  • வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி தினந்தோறும் வழங்கப்படும்.
  • 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  • புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும்.
  • எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயத்தப்படும்.
  • மீனவ சமுதாய ஈமச்சடங்குகளுக்கான நிதி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும்.
Read Entire Article