புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வகுப்புகளை தவிர்த்தல், பாதியிலேயே படிப்பை கைவிடுதல், படிக்கும் பாடத்திட்டத்தில் இருந்து வெளியேறுதல் போன்ற செயல்களில் ஈடபட்டால் அவர்களின் மாணவர் விசா ரத்து செய்யப்படும்.
மேலும் எதிர்காலத்தில் வேறு எந்த விசாக்களையும் பெறுவதற்கான தகுதிகளையும் இழக்க நேரிடும். எனவே பிரச்னைகளை தவிர்க்க எப்போதும் விசா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிகளவில் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 2023 வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி 1.40 லட்சம் பேர் மாணவர் விசா பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டாக, மற்ற அனைத்து நாடுகளையும் விட இந்திய மாணவர்களே அதிகளவில் அமெரிக்காவில் படிப்பது குறிப்பிடத்தக்கது.
The post உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால் விசா ரத்து: அமெரிக்கா மிரட்டல் appeared first on Dinakaran.