
லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி (LPU) என்பது பஞ்சாப் மாநிலத்தின் பக்வாரா பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய அளவில் முன்னணியில் உள்ள உயர்கல்வி நிறுவனமாகும்.
இந்த கல்வி நிறுவனத்தின் சிறப்பு குறித்து, அதன் வேந்தரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அசோக் குமார் மிட்டல் கூறுகையில், லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டியில் பயின்ற 1,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை ஆண்டு ஊதியம் பெறும் பணிகளுக்கு சர்வதேச பெருநிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் குறிப்பாக ஒரு மாணவர் ரூ. 3 கோடி ஆண்டு ஊதியம் பெறும் ஐ.டி நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வேகமாக மாறிவரும் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி மாணவர்கள் உயர்மட்ட வேலை வாய்ப்புகளைப் பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். Edu Revolution என்ற முன்முயற்சியின் மூலம் நமது பல்கலைக்கழகம் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைத்து, செழித்து வளரவும், உலகளாவிய வேலை வாய்ப்பு சந்தை நிலவரத்தில் தொடர்ந்து முன்னணியில் இருப்பதற்குமான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது.
அவ்வகையில் நடப்பு 2025-ம் ஆண்டு இணையற்ற வெற்றியுடன் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களில் இருவர் ரூ.1 கோடிக்கும் அதிகமான ஆண்டு வருமானமுள்ள பணிகளை பெற்றுள்ளனர். பி.டெக் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் (இசிஇ) இறுதி ஆண்டு மாணவர் ஸ்ரீ விஷ்ணு, முன்னணி ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனத்தில் ரூ.2.5 கோடி ஆண்டு ஊதியம் பெறும் பணியில் அமர்ந்துள்ளார்.
இந்த சாதனை இந்திய அளவில் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி-களில் பயின்ற மாணவர்கள் பெறும் வேலைவாய்ப்பு சாதனைகளை முறியடித்து, லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டிக்கு அதன் இறுதியாண்டு மாணவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை என்னவென்றால், இறுதி ஆண்டு இசிஇ மாணவர் பெட்டிரெட்டி நாக வம்சி ரெட்டி, ஒரு முன்னணி ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனத்தில் ஆண்டு ஊதியம் ரூ.1.03 கோடி (1,18,000 அமெரிக்க டாலர்) பெறும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவ்வகையில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
மொத்தத்தில், மதிப்புமிக்க பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்ற பல்வேறு துறைகளில் பயின்ற பி.டெக் மாணவர்களுக்கு மொத்தம் 7,361 பணி வாய்ப்புகளை பெரு நிறுவனங்கள் அளித்துள்ளன. அவற்றில், பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ், நுட்டானிக்ஸ், மைக்ரோசாப்ட், சிஸ்கோ, பேபல், அமேசான் ஆகிய நிறுவனங்களும் அடங்கும். அப்படிப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில் சராசரி ஆண்டு ஊதியம் ரூ.16 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வளாகத்தேர்வுகளிலும் இதேபோல மாணவர்கள் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
பெருநிறுவனங்களை பொறுத்தவரை அதிக ஆண்டு ஊதியம் அளிக்கும் நிறுவன வரிசையில் பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் (ரூ.54.75 லட்சம்) முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து நுட்டானிக்ஸ் (ரூ.53 லட்சம்) மற்றும் மைக்ரோசாப்ட் (ரூ.52.20 லட்சம்) ஆகியவை உள்ளன. ஒட்டுமொத்தமாக 1,912 மாணவர்கள் பல்வேறு பணி வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அவர்களில் 377 பேருக்கு மூன்று நிறுவனங்களிலிருந்தும், 97 பேருக்கு நான்கு நிறுவனங்களிலிருந்தும், 18 பேருக்கு ஐந்து நிறுவனங்களிலிருந்தும், ஏழு மாணவர்களுக்கு ஆறு நிறுவனங்களிலிருந்தும் பணி அழைப்பு பெற்றுள்ளனர்.
பி.டெக் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் மாணவரான ஆதிரெட்டி வாசு நம்பமுடியாத வகையில் ஏழு நிறுவனங்களிலிருந்து பணி அழைப்பு வாய்ப்புகளைப் பெற்று சாதனையைப் படைத்துள்ளார். மேலும், அமேசான் (ரூ 48.64 லட்சம்), இன்ட்யூட் லிமிடெட் (ரூ 44.92 லட்சம்), சர்வீஸ் நவ் (ரூ 42.86 லட்சம்), சிஸ்கோ (ரூ 40.13 லட்சம்), பேபல் (ரூ 34.4 லட்சம்), அப்னா (ரூ 34 லட்சம்), காம்வால்ட் (ரூ 33.42 லட்சம்), மற்றும் ஸ்கேலர் (ரூ 32.50 லட்சம்) போன்ற நிறுவனங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அக்செஞ்சர், கேப்ஜெமினி, டிசிஎஸ் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கும் மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். அதில், கேப்ஜெமினி இந்தியா பிரைவேட் லிமிடெட் 736 மாணவர்களை ஆய்வாளர் மற்றும் மூத்த பகுப்பாய்வாளர் பதவிகளுக்கு பணியமர்த்தியது. மைண்ட்ட்ரீ 467 மாணவர்களை பட்டதாரி பொறியாளர் பயிற்சி பதவிகளுக்கு பணியமர்த்தியது. சிடிஎஸ் நிறுவனம் 736 மாணவர்களை தலைமை பொறுப்புள்ள பணிகளில் நியமித்தது. அக்செஞ்சர் 279 பணிகள், டிசிஎஸ் 260 பணிகள், கேபிஐடி டெக்னாலஜிஸ் 229 பணிகள், டிஎக்ஸ்சி டெக்னாலஜி 203 பணிகள் மற்றும் எம்பிஎச்ஏசிஎஸ் 94 பணிகளில் மாணவர்கள் அமர்ந்துள்ளனர்.
ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற முக்கிய பொறியியல் துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளன, பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ், சிலிக்கான் லேப்ஸ், ட்ரைடென்ட் குரூப், நுட்டானிக்ஸ், ஆட்டோடெஸ்க் மற்றும் அமேசான் போன்ற தொழில்துறை நிறுவனங்கள் பெருமளவில் மாணவர்களுக்கு பணி வாய்ப்புகளை அளித்துள்ளன.
லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டியில் நடப்பாண்டு சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற, மாணவர்கள் LPUNEST 2025 நுழைவுத் தேர்விலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கான நேர்காணலிலும் தேர்ச்சி பெற வேண்டும். மாணவர் சேர்க்கை பற்றி மேலும் அறிய https://bit.ly/4jEhdeR என்ற இணையதளத்தை அணுகலாம்.
மேலும் தகவலுக்கு லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி இணையதளத்தை பார்க்கவும்: www.lpu.in