உத்திரமேரூரில் மரம் நடும் விழா

1 month ago 10

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சோமநாதபுரம் கிராமத்தில் தனியார் சார்பில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரம் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், சோமநாதபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விவசாயிகளின் பங்களிப்போடு தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற பலன் தரக்கூடிய விலைமதிப்பு மிக்க மரங்கள் நடவு செய்யப்பட்டது.

மேலும், மரங்கள் வளர்ப்பது அவற்றை பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வருடந்தோறும் தொடர் வருமானம் பெறும் வகையில் ஊடுபயிர்கள் சாகுபடியாக ஜாதிக்காய், மிளகு, திப்பிலி, பட்டை போன்ற நறுமணப் பயிர்களையும் சாகுபடி செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பலன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

The post உத்திரமேரூரில் மரம் நடும் விழா appeared first on Dinakaran.

Read Entire Article