டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரி என்ற பகுதியில் இருந்து டாஹல்சோரி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ், எதிர்பாராத விதமாக சாலையைவிட்டு விலகி 100 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த விபத்தைக் கண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உள்ளூர் மக்களுடன் இணைந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.
சில மணி நேர மீட்புப் பணிக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரின் சடலங்களை மீட்டனர். 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.