உத்தமபாளையம் பகுதியில் வெண்டைக்காயில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பு

1 month ago 6

 

தேவாரம், அக். 14: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் வெண்டைக்காயில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உத்தமபாளையம் பகுதிகளில் ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காய் பரவலாக சாகுபடி செய்து வருகின்றனர். விதை நடவு செய்து 40 நாள் கழித்து அறுவடை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் சாகுபடியில் சிறந்த விளைச்சலை எடுப்பதில் பல பிரச்சனைகள் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வெண்டைக்காய் பயிரில் வெள்ளை பூச்சி, தத்துப்பூச்சி, கருகல் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், “வெண்டைக்காயில் தத்துப்பூச்சி,தண்டு, காய் துளைப்பான்,நூற்புழு மற்றும் சிவப்பு சிலந்தி உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுகிறது.இதில் தத்துப்பூச்சி செடிகளின் வளர்ச்சியை பாதித்து அதிகமான மகசூலுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் வெண்டைக்காய் விலை குறைவாக விற்பனை ஆவதால் வருமானம் கட்டுப்படியாகாத நிலை உள்ளது’’ என்றார்.

The post உத்தமபாளையம் பகுதியில் வெண்டைக்காயில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article