உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

2 months ago 12

 

கோத்தகிரி, செப்.30: கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் காமராஜர் சதுக்கம், டானிங்டன், பேருந்து நிலையம், அரவேனு உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது‌.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் போஜன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை போஜன், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், பேரூர் கழக செயலாளர் காளிதாஸ், ஒன்றிய அவைத்தலைவர் கில்பர்ட், ஒன்றிய துணை செயலாளர் மு.க.கணபதி, பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, கோத்தகிரி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் தங்கவேல்,

அசார் கான், இளந்தென்றல் பாபு, மணிகண்டராஜ், அகல்யா, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகராஜ், சுசில் ஜீவானந்த், எல்பிஎப் ரத்தினகுமார், ஜெகதீஸ்வரன், முருகன், வின்சென்ட், சுப்பு, நல்லுசாமி, கணேசன், ரஜினிசெல்வம், நிஷாந், நவீன்‍, வினோத், மதிவாணன், அன்வர், கிருஷ்ணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article