உதகை - குன்னூர் மலை ரெயில் சேவை இன்று ரத்து

6 months ago 25

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குன்னூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனமழையால் மரப்பாலம், காட்டேரி பூங்கா, கரும்பாலம், சேலாஸ் உள்பட 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் விழுந்த மண், பாறைகளை அகற்றினர். கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், உதகை - குன்னூர் இடையே இயங்கும் மலை ரெயில் சேவை இன்று (நவ.5) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article