*வேப்பிலை, மருதாணி, மஞ்சள் ஆகிய மூன்றையும் அரைத்து குதிகால் வெடிப்பில் பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். இரவு படுக்க போகும் போது இந்த மருந்தை போடுவது நல்லது.
*கறிவேப்பிலையை துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தை போக்கும். சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.
*ஒரு தேக்கரண்டி மிளகு தூள், சிறிதளவு இஞ்சி, ஒரு பிடி துளசி இலை சேர்த்து கஷாயம் போல் செய்து சர்க்கரை, பால் சேர்த்து அருந்த தொண்டைவலி, சாதாரண ஜுரம் ஆகியவை குணமாகும்.
*ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து, சிறிது சோடா உப்பை கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
*அகத்திக் கீரையில் 65 விதமான சத்துகள் அடங்கி இருக்கின்றன. மலச் சிக்கல், ரத்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட வேண்டும். வெயிலில் அலையும் வேலை உடையவர்களும் காபி, டீ சாப்பிடுபர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*உட்கார்ந்தால், எழுந்தருக்க முடியவில்லை. மூட்டி வலிக்கிறது என்று சொல்பவர்கள் தேங்காய் எண்ணெயில் கற்பூர கட்டியை சிறிதளவு போட்டு கலக்கி சூடுப்படுத்திய பிறகு மூட்டுகளில் பூசி வந்தால், கீல் வாத வலி, மூட்டு வலி
குணமாகும்.
*செம்மண்ணைதண்ணீரில் கரைத்து அடுப்பில் சுடவைத்தால் கெட்டியாக சூடாக இருக்கும். இந்த மண்களை காலில் வீக்கம் உள்ள இடத்தில் கை பொறுக்குமளவு சூடாக எடுத்து, இரவு நேரத்தில் பூச வேண்டும். காலையில் வீக்கம் மறைந்து காணப்படும். இரண்டு மூன்று முறை போட்டால் பூரண குணமடையும். இது யானைக்கால் உள்ளவர்களுக்கு பொருந்தாது. திடீர் வீக்கம், அடிபட்ட வீக்கம் இவைகளுக்கும் பொருந்தும். கடையில் விற்கும் காவியில் போடக் கூடாது. செம்மண்ணில் தான் போட வேண்டும்.
– அ.ப.ஜெயபால்
The post உணவே மருந்து! appeared first on Dinakaran.