தேவையான பொருட்கள்
ஒன்றுபெரிய வெங்காயம்
2தக்காளி
2பச்சை மிளகாய்
அரை ஸ்பூன்மிளகாய் தூள்
ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள்
அரைப்பதற்கு
ஒன்றுபெரிய வெங்காயம்
சிறிதளவுஇஞ்சி
பத்து பல்பூண்டு
சிறிதுபட்டை
3கிராம்பு
அரை ஸ்பூன்சீரகம்
அரை ஸ்பூன்சோம்பு
ஒன்றுநட்சத்திர பூ
1பிரியாணி இலை சிறியது
4 ஸ்பூன்தேங்காய்
4முந்திரி
2பச்சைமிளகாய்
ஒன்றுஏலக்காய்
4முட்டை
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்காமல் பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதங்கியவுடன் அதனுடன் மிளகாய் தூள் கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும் பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் அளவிற்கு கொதிக்க விடவும். பின்பு முட்டையை கரண்டியில் உடைத்து ஊற்றி அதனை மெதுவாக குழம்பில் உடையாமல் சேர்க்கவும். (கரண்டியில் ஊற்றிய பின்பு குழம்பில் ஊற்றவும் ஒரு சில சமயம் முட்டை கெட்டுப் போய் இருக்கவும் வாய்ப்பு உண்டு.கரண்டியால் கிளறாமல் மூடி போட்டு 5 முதல் 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.சிறிது நேரம் கழித்து முட்டை உடைத்து ஊற்றிய இடத்தில் கரண்டியால் கிளறி அடுப்பை அனைத்து விடவும். உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு தயார்.
The post உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு appeared first on Dinakaran.