உடுமலை அருகே குளத்தில் இருந்து சிறுமி, 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு... சடலமாக கிடந்த நிலையில் போலீசார் விசாரணை

4 months ago 20
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மானுபட்டியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள குளத்தில் இருந்து 16 வயது சிறுமி மற்றும் இரண்டு இளைஞர்களின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிச்சிக்கோட்டையை சேர்ந்த நாகராஜ் தனது மகள் தர்சனா காணாமல் போனதாக தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் தேடி வந்த நிலையில், தர்சனா, அவரது உறவினர் மாரிமுத்து மற்றும் சென்னையை சேர்ந்த ஆகாஷ் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 11ஆம் வகுப்பு படிக்கும் தர்சனாவிற்கு சமூக வலைதளம் மூலம் சென்னையை சேர்ந்த ஆகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், குளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனரா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Read Entire Article