உடுப்பி என்கவுன்டரில் மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை

7 months ago 25

உடுப்பி,

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கப்பினாலே வனப்பகுதியில் மாவோயிஸ்டு குழு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று இரவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவரான விக்ரம் கவுடா கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

கவுடாவின் குழுவில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களை கண்டறியவும், மாநிலத்தில் மாவோயிஸ்டு நடவடிக்கைகளை மேலும் ஒடுக்கவும் விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 2005ம் ஆண்டு சிக்கமகளூரில் ஒரு முக்கிய மாவோயிஸ்டு சித்தாந்தவாதியான சாகேத் ராஜன் கொல்லப்பட்டதற்கு பிறகு, இப்பகுதியில் நடந்த முதல் ஆயுத என்கவுண்டர் இதுவாகும். விக்ரம் கவுடாவின் மரணம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மாவோயிஸ்டு செல்வாக்கை பலவீனப்படுத்தக்கூடும் என்று நம்புவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article