உடல் உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

1 week ago 4

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த பசுமை குமார் என்ற பாட்டாளி சொந்தம் மரத்திலிருந்து விழுந்து மூளைச்சாவு அடைந்து விட்ட நிலையில் அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்திருக்கிறார்கள். குடும்பத் தலைவரின் இழப்பையும் தாங்கிக் கொண்டு உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 8 பேரின் உயிர்களை காப்பாற்றியிருப்பது பாராட்டத்தக்கது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்த போது தான், தேசிய உடல் உறுப்பு தானத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். அதன் பயனாக உடல் உறுப்பு தானம் என்பது இப்போது ஒரு கலாச்சாரமாக மாறியிருப்பது மனநிறைவு அளிக்கிறது. உடல் உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் இறந்தும் பிறரை வாழ வைக்கும் கலாச்சாரம் தழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article