உடலுக்கு செம்மை சேர்க்கும் செம்பு பாத்திரம்!

3 months ago 22

தண்ணீர் அசுத்தமான நிலையில் இருக்கும்போது அதை அருந்தினால் பல வகையான நோய்கள் உருவாகும். இந்த பாதிப்புக்கு காரணம் தண்ணீரில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் தான்.இந்தக் கிருமிகள் குறித்து பண்டைய மக்களுக்கு தெரிந்திருக்கிறது. எனவேதான் தண்ணீரில் மறைந்திருக்கும் ஆபத்தை விளைவிக்கும் இது போன்ற கிருமிகளை அழிக்க அவர்கள் பல உத்திகளை கையாள்வார்கள்.அந்த வகையில் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து பருகினார்கள். தண்ணீரை தேக்கி வைக்கும் நீர் நிலைகளில் செம்பு நாணயங்களை போட்டுத் தண்ணீரை சுத்தப்படுத்தினார்கள்.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கப்படும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு செம்பு உலோகத்தால் நீரில் வினைகள் உண்டாக்கப்பட்டு நீரின் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். எனவேதான் செம்புப் பாத்திரத்தில் வைக்கப்படும் நீரில் புழுக்கள் உருவாவதில்லை. எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் சேமிக்கப்படும் போது செம்பு அதன் வேதியியல் மாற்றத்தால் தண்ணீரானது கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெறுகிறது.

பொதுவாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதால் உடலில் சில நோய் வராமல் தடுப்பதுடன் ஒருவரது சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்வதற்கும் தாமிரம் உதவுகிறது.இது தைராய்டு சுரப்பியை நன்றாகச் செயல்பட தூண்டுகிறது. பொதுவாக இரும்பு சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படுகிறது. செம்பு உடலில் இரும்பை உறிஞ்ச உதவுவதால் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்த சோகை தடுக்கப்படுகிறது. மேலும் செம்பு எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது. இதனால் மூட்டுவலிக்கு சரியான மருந்தாக அமைகிறது.செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. செம்பு ரத்த நாளங்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயம் நன்கு செயல்பட உதவுகிறது. நரம்புகளையும் வலுப்படுத்தும். அந்த வகையில் செம்பு என்பது மனித உடல் நலத்துக்கு உதவும் உலோகம் ஆகும்.இதில் தண்ணீர் வைத்துப் பருக பலன்கள் ஏராளமாகக் கிடைக்கும். குறைந்தபட்சம் பிளாஸ்டிக் குடங்கள், வாட்டர் கேன்களையாவது தவிர்க்கலாம்.
– அ.ப. ஜெயபால்

The post உடலுக்கு செம்மை சேர்க்கும் செம்பு பாத்திரம்! appeared first on Dinakaran.

Read Entire Article