உசிலம்பட்டி, ஜன. 14: உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் அமைந்துள்ள ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியின் 10ம் ஆண்டு விழா ‘தியாகு 2025’ என்ற தலைப்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் காசிமாயன் தலைமை தாங்கினார். இயக்குநர் ஜெயகிஷோர்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பாஸ்டின்குமார் வரவேற்றார். இவ்விழாவில் ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை இயக்குநர் ஜெனரல் சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளின் எதிர்காலத்திற்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.
இதில் 2023-24ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இந்நிகழ்வில் பள்ளி டிரஸ்ட் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post உசிலம்பட்டி அருகே ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.