உங்கள் PF எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்று தெரியுமா?: ஒன்றிய அரசு அறிக்கை வெளியீடு

3 weeks ago 5

டெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை, வருங்கால வைப்பு நிதி ஆணையம் எங்கெல்லாம் முதலீடு செய்கிறது என்ற விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி வருங்கால வைப்பு நிதி ஆணையம் தங்கள் வசமுள்ள PF தொகையை கடன் பத்திரங்களிலும், Exchange Traded Funds மூலம் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்கிறது. ஒன்றிய அரசு வழங்கியுள்ள முதலீட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முதலீட்டை அது மேற்கொள்கிறது. 2024 மார்ச் மாத நிலவரப்படி வருங்கால வைப்பு நிதி அலுவலக வசம் ரூ.24.75 லட்சம் கோடி உள்ளது.

இவற்றுள் ரூ.22.40 லட்சம் கோடி கடன் பத்திரங்களுக்கும், ரூ.2.35 லட்சம் கோடி Exchange Traded Funds வழியாக பங்குச் சந்தை முதலீட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அலுவலகம் Exchange Traded Funds மூலமாக 2017-18ம் நிதியாண்டில் ரூ.22,766 கோடியும், 2018-19ம் நிதியாண்டில் ரூ.27,974 கோடியும், 2019-20ம் நிதியாண்டில் ரூ.31,501 கோடியும், 2020-21ம் நிதியாண்டில் ரூ.32,070 கோடியும், 2021-22ம் நிதியாண்டில் ரூ.43,568 கோடியும், 2022-23ம் நிதியாண்டில் ரூ.53,081 கோடியும், 2023-24ம் நிதியாண்டில் ரூ.57,184 கோடியும், 2024-25ம் நிதியாண்டில் அக்டோபர் வரை ரூ.34,207 கோடியும் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளது. நேரடியாக எந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளில் வருங்கால வைப்பு நிதி முதலீடு செய்யப்படுவதில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்து இருக்கிறது.

The post உங்கள் PF எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்று தெரியுமா?: ஒன்றிய அரசு அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article