
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திரசிங் தோனி. இந்தியாவுக்கு 3 ஐ.சி.சி. உலகக்கோப்பைகளை (டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) வென்று கொடுத்த பெருமைக்குரியவர். தற்போது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மகேந்திரசிங் தோனியிடம் தொகுப்பாளர், "உங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்ட அபத்தமான வதந்தி என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தோனி, "நான் ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் குடிப்பேன்" என்று கூறி சிரித்தார்.