*கலெக்டர் வழங்கல்
கரூர் : கால்நடை பராமரிப்பு, பயிர்க்கடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 19லட்சம் கடன் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
மக்களின் இடங்களுக்கே சென்று குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்ககே சென்று பணியாற்றும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் பொதுமக்களை குறைகளை கேட்டறியும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமானது காலை 9 மணிக்கு கருர் வட்டத்தில் தொடங்கியது.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலெக்டர் தங்கவேல் தமைமைவகித்தார்.கருர் வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் 2 நாட்களாக கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண திட்டமிடப்பட்டது.
கரூர் வட்டத்தில் களப்பணிக்கு செல்லும் அலுவலர்கள் காலை 9 மணி முதல் 1.30 மணி வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக் கடைகள், கிராம நிர்வாக அலுவலகம், வட்டார பொது சுகாதார மைய கட்டிடம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
2 மணி முதல் 4.30 மணி வரை தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் அரசுத்துறை அலுவலர்களின் கருத்துக்கள் அடிப்படையிலான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொது மக்களுடன் கலந்துரையாடல், மாலை 6 மணி முதல் தொடர்புடைய வட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள தெரு விளக்குகளின் செயல்பாடுகள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், அரசு விடுதிகள், பொது மற்றும் சமூதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.
கள ஆய்வுக்கு செல்லும் அலுவலர்கள் அந்த பகுதிகளில் தங்கி நாளைய தினம் அதிகாலை 6 மணி முதல் அந்த வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள், குடிநீர் வசதிகள், பொது போக்குவரத்து சேவை, முதல்வரின் காலை உணவுத் திட்டம், பால் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
வேளாண் வணிகம் சார்பாக, ஒத்தையூர் தோரணக்கல்பட்டியில் தமிழ்நாடு மில்லட் மிஷன் திட்ட ஆய்வு குறித்தும், மாவட்ட தொழில் மையம் சார்பாக உப்பிடமங்கலம் பகுதியில் நீட் ஸ்கீம் குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பாக பொம்மனத்துப்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் அமைக்குமு பணி குறித்தும், கூட்டுறவு சங்கங்கள் சார்பாக வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கல் குறித்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பாக வெள்ளியணையில் தமிழ்நாடு மருத்துவ வாணிப் கழகம் குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பாக வெள்ளியணை பகுதியில் பொது நூலக கட்டுமானம் அமைக்கும் பணி, ஊராட்சி துவக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணி போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சார்பில் கால்நடை பராமரிப்பு கடன் 6 பயனாளிகளுக்கு ரூ. 3லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், பயிர்க்கடன் 6 பயனாளிகளுக்கு ரூ. 91ஆயிரம் மதிப்பிலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவியாக ரூ. 15லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ. 19லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளும் வழங்ப்பட்டன.
தொடர்ந்து தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு இலவச தையல் எந்திரம் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக 1 பயனாளிக்கு இடுபொருட்களும் வழங்கப்பட்டது.
பின்னர், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப் கழகம் சார்பாக சணப்பிரட்டியில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கிடங்கு குறித்தும், கரூர் மாநகராட்சியின் சார்பாக பசுபதீஸ்வரா மேல்நிலைப் பள்ளிக்கு 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.ஆய்வின் போது, திட்ட இயக்குநர் லேகா தமிழ்ச்செல்வன், ஆவின் மேலாளர் பிரவீனா உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
The post `உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் கால்நடை பராமரிப்பு, பயிர்க்கடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 19லட்சம் கடன் appeared first on Dinakaran.