உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 5 பேர் பலி

1 week ago 3

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அதே சமயம், மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் ராணுவம் போரை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் பெரிய நகரங்களில் இரவு நேரங்களில் ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இன்று ரஷியா உக்ரைனின் பொல்டாவா நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிதத்திலிருந்து சுமார் 21 பேர் மீட்கப்பட்டனர்.

அதே போல் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் இடிபாடுகளில் விழுந்ததில் 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் இன்று இரவு மட்டும் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷியாவிற்கு எதிராக உக்ரைனும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் 9 டிரோன்களை இடைமறித்து தாக்கி அழித்தனர்.

Read Entire Article