உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்

4 hours ago 3

கீவ்,

ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு நாடுகள் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் ரஷியா, தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

குறிப்பாக போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கைக்கு ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போரில் ரஷியாவுக்கு உதவுவதற்காக வடகொரிய ராணுவ படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம்.(ICBM) ஏவுகணையை ரஷியா பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, ரஷியாவின் அஸ்திராகான் பகுதியில் இருந்து உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டிரிப்ரோ நகரை குறிவைத்து ஐ.சி.பி.எம். ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article