உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்

4 hours ago 3

கீவ்,

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.

இந்த போரை நிறுத்த அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முயன்று வருகின்றன. நிபந்தனையின்றி 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா சம்மதிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தின.

அமைதி பேச்சுவார்த்தை நடத்த போர் நிறுத்தத்தை ரஷியா ஏற்க வேண்டும் என்று உக்ரைனும் வலியுறுத்தியது. ஆனால், போர் நிறுத்த யோசனையை ரஷியா நிராகரித்தது. அதற்கு பதிலாக, துருக்கியில் உக்ரைனுடன் 15-ந் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தது.

ரஷியாவின் விருப்பத்தை உக்ரைன் ஏற்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுக்கொண்டார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒருபடி மேலே சென்று, துருக்கியில், ரஷிய அதிபர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தார்.

போரை நிறுத்த எல்லாவற்றையும் உக்ரைன் செய்து வருவதாகவும் அவர் கூறினார். அவரது அழைப்புக்கு ரஷியா பதில் அளிக்கவில்லை. இந்த பின்னணியில், போர் நிறுத்த யோசனையை நிராகரித்த ரஷியா நேற்று உக்ரைன் மீது டிரோன் தாக்குதலை தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட ஷாகித், டிகாய் டிரோன்களை உக்ரைன் மீது ஏவி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.

Read Entire Article