
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு ஆயுத தொழிற்சாலை இயங்கி வருவதாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார் மீரட் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது சட்டவிரோதமாக ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக ஆயுத தொழிற்சாலை நடத்தி வந்தவர்கள் யார்? அவர்களிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியவர்கள் யார்? என்பது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.