உ.பி.யில் ஆன்லைன் வழியே ஆயுத விற்பனை; 7 பேர் கைது

2 months ago 15

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் நகரில் ஆன்லைன் வழியே ஆயுத விற்பனை நடந்து வருகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உத்தர பிரதேச போலீசார் சோதனை நடத்தியதில் 7 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சமூக ஊடகங்களின் உதவியுடன் ஆயுத விற்பனையில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில், 2 பேர் ஆயுதங்களை வாங்கியவர்கள் ஆவர் என போலீசார் இன்று தெரிவித்தனர்.

அந்த 7 பேரும் அசாம் ரிஸ்வி, விவேக், பிரதீக் தியாகி, மணீஷ் குமார், ரிஷப் பிரஜாபதி, விஷால் மற்றும் பிரதீக் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 3 துப்பாக்கிகள் மற்றும் 2 வெடிக்க தயாரான நிலையில் உள்ள உறைகளுடன் கூடிய தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இவர்களில் விஷால் மற்றும் பிரதீக் ஆகிய 2 பேரும் ஆயுதங்களை வாங்க வந்தவர்கள். இதுபோன்று பலரிடம் அவர்கள் ஆயுதங்களை விற்று வந்துள்ளனர். சமூக ஊடகம் வழியே ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன்பின் வங்கி கணக்குகள் அல்லது நேரில் பணம் கொடுப்பது என பணபரிமாற்றமும் நடந்து உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என முசாபர்நகர் நகரத்தின் எஸ்.பி. சத்ய நாராயண் பிரஜாபதி கூறியுள்ளார்.

Read Entire Article