உ.பி.யின் சம்பலில் மற்றொரு பழமையான கிணறு கண்டுபிடிப்பு

6 hours ago 2

சம்பல்: உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள லஷ்மன் கஞ்ச் பகுதியில் 150ஆண்டுகள் பழமைவாய்ந்த படிக்கட்டு கிணறு அகழ்வாராய்ச்சி பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு பழமைவாய்ந்த கிணறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் ஷாஜாதி சராய் பகுதியில் உள்ள புனித தலத்தில் நீண்ட ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த பழமைவாய்ந்த கிணறு மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த கிணற்றில் சுத்தமான தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 8 அடி ஆழத்திலேயே கிணற்றில் தண்ணீர் கிடைத்துள்ளது. இந்த இடம் பாபா ஷேம நாத் ஜீயின் சமாதியாகும். இந்த புனித தலத்துக்கு செல்வது தங்களது விருப்பங்களை நிறைவேற்றும் என்று மக்கள் நம்புகின்றனர்.

The post உ.பி.யின் சம்பலில் மற்றொரு பழமையான கிணறு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article