கோவை ஈஷா யோகா மையத்தில் எவரையும் திருணம் செய்யவோ துறவறம் மேற்கொள்ளவோ வலியுறுத்துவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவரவர் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அரசியல் சட்டம் வழங்கியிருப்பதாகவும், அதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என்றும் ஈஷா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
தமது 2 மகள்களை ஈஷாவில் இருந்து மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று கோரி அவர்களின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு பெண் துறவிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.