ஈரோடு,பிப்.8: தெற்கு ரயில்வேயின் ரயில்வே ஆலோசனை குழுக் கூட்டம் நேற்று முன் தினம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் தலைமை வகித்தார். இதில், சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ப.க.பழனிசாமி பேசுகையில், ”ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் ரயில் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும்.
வெண்டிபாளையம் அருகிலும், காளை மாட்டு சிலை அருகிலும், சென்னிமலை சாலை, கலைஞர் நகர் அருகிலும் ரயில்வே மேம்பாலங்கள் கட்டாயமாக அமைத்து கொடுக்கப்பட வேண்டும். ஏற்காடு விரைவு ரயில் இரவு 10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் நேர மாற்றம் செய்யவேண்டும்” எனும் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.மேலும், அவரது கோரிக்கைகளை மனுவின் மூலமாகவும் சமர்ப்பித்தார்.
The post ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் வைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.