ஈரோடு: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

3 hours ago 2

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தியாக மூர்த்தி (20 வயது). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. ஐ.டி. படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காரமடை தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லுாரிக்கு விடுமுறை என்பதால், தனது நண்பரான பரிசாபாளையத்தை சேர்ந்த லோகித் என்பவரை பார்க்க தியாக மூர்த்தி வந்துள்ளார்.

இருவரும் பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே, பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் இருவரும் சென்ற நிலையில், தியாக மூர்த்தியின் கையில் மின் கம்பி பட்டதில் தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக லோகித் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தியாக மூர்த்தியை புன்செய் புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தியாக மூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article