ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

3 weeks ago 4

 

ஈரோடு, அக்.29: ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர். ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28ம் தேதி முதல் நவம்பர் மாதம் 2ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், அனைத்து துறை அலுவலர்களும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ‘அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவேன், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை செயல்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன்’ என கலெக்டர் வாசிக்க, அனைத்து துறை அலுவலர்களும் தொடர்ந்து வாசித்து உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா, தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Read Entire Article