ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு கேட்ட சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு

3 hours ago 3

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடக்கிறது.

இதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி கடைசி நாள் ஆகும். இன்று ஒரேநாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற 20-ந் தேதி கடைசி நாளாகும்.

இதற்கிடையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாடகளுக்கு முன் அறிவித்தார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு உழவு செய்யும் விவசாயி மற்றும் புலி சின்னங்களை வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. உழவு செய்யும் விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் கரும்பு விவசாயி சின்னம் கோரி நாதக விண்ணப்பித்துள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்குகள் பெற்றதையடுத்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article