ஈரானின் அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய டிஜிட்டல் தளங்கள் மீது, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டிலுள்ள அணுசக்தி நிலையங்கள், எரிபொருள் விநியோகம், போக்குவரத்து நெட்வொர்க், துறைமுகங்கள், நீதித்துறை, சட்டம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் டிஜிட்டல் செயல்பாடுகள் முடங்கியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில், சைபர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.