ஜெருசலேம் : ஈரான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேலின் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். தங்களை தற்காத்து கொள்வதற்கான வலிமையும் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியும் இஸ்ரேலுக்கு இருப்பதை ஈரான் மறந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. அதற்கான விலை கொடுத்தாக வேண்டும். எங்களை தற்காத்து கொள்ள எங்களுக்கு இருக்கும் வலிமையும்,எதிராளிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியை பற்றியும் ஈரான் ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை.,”என்றார். இக்கட்டான நேரத்தில் பக்கபலமாக இருந்த அமெரிக்காவுக்கும் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே ஈரான் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பதுங்கு குழிகளில் இருந்து மக்கள் வெளியே வரலாம் என்றும் இஸ்ரேல் அறிவுறுத்தல் வழங்கியது. ஈரான் தாக்குதல் நிறுத்தப்பட்டதால் ஜோர்டான், லெபனானில் வான் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
The post “ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை appeared first on Dinakaran.