ஈரான் தேசிய கொடிகளை ஏந்தியவாறு சாலைகளில் ஊர்வலம்: இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாக மக்கள் பேட்டி

1 month ago 13

ஈரான்: இஸ்ரேல் மீதான தாக்குதல்களால் பதற்றம் நிலவும் வேளையில் இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாக ஈரான், ஈராக் நாடுகளின் குடிக்கும் கூறுகின்றனர். இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு ஈரான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானிலேயே வழிமறித்து அழித்து விட்டாலும் 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இலக்கினை சரியாக தாக்கினர். இஸ்ரேல் மீதான துல்லிய தாக்குதலே ஈரான் உறுதி செய்த நிமிடமே பொதுமக்களும், ராணுவ வீரர்களும் தலைநகர் டெஹ்ரானில் ஒன்றுகூடி ஈரான் அரசுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.

வாகனங்களில் ஒலிப்பான்களை இயக்கியும், ஈரான் கொடியை ஏந்திய வாறும் மக்கள் சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை ஆதரித்து தலைநகர் பாக்தாத், பஸ்ராவில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனிய மற்றும் ஹிஸ்புல்லா கொடிகளை அசைத்தது முழக்கம் எழுப்பினர். இந்நிலையில் ஏவுகணை தாக்குதலுக்கு எந்நேரமும் பதிலடி கொடுக்கலாம் என்பதால் ஈரானில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டால் தப்பித்து செல்வதற்கு வசதியாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாகனங்களில் எரிபொருளை நிரப்பி வருகின்றனர். இதனால் டெஹ்ரானில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

The post ஈரான் தேசிய கொடிகளை ஏந்தியவாறு சாலைகளில் ஊர்வலம்: இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாக மக்கள் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article