ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடைமறித்து தூள் தூளாக்கிய இஸ்ரேல்

4 months ago 34
ஈரான் ஏவிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு, இஸ்ரேலின் பலமான பல அடுக்கு வான்பாதுகாப்பு அரணே காரணம் எனக்கூறப்படுகிறது. அயர்ன் டோம், டேவிட்’ஸ் ஸ்லிங் மற்றும் ஏரோ பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 4 வான் பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்ட தடுப்பு அரண்களை இஸ்ரேல் அமைத்துள்ளது. ஈரான் ஏவிய ஏவுகணைகளை ரேடார் மூலம் கண்டறிந்த அடுத்த சில விநாடிகளில், அவற்றின் வேகம் மற்றும் பாதையை கணித்த இஸ்ரேல், அவற்றை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை அடுத்த சில விநாடிகளில் ஏவி அழித்ததாகவும் கூறப்படுகிறது. வழிமறித்து தாக்க, இருநிலை பூஸ்டர் கொண்ட, ஒலியை விட 9 மடங்கு வேகமாகச் செல்லும் ஏவுகணைகள் செங்குத்தாக ஏவப்பட்டதாகவும், ஒருவேளை அவை இலக்கை குறிவைத்து அழிக்க முடியவில்லை என்றால், இலக்கிலிருந்து 40 மீட்டருக்குள் வெடித்துச்சிதறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 
Read Entire Article