ஈரானில் நீதிபதி குத்தி கொலை

1 day ago 3

தெஹ்ரான்: தெற்கு ஈரானில் நீதிபதி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எஹ்சும் பாகேரி(38) என்பவர் நகர நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை கையாண்டு வந்தார். இந்நிலையில் தெற்கு ஈரானின் ஷிராஸ் நகரத்தில் நேற்று பணிக்கு சென்று கொண்டிருந்த எஹ்சும் பாகேரி அடையாளம் தெரியாத 2 நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post ஈரானில் நீதிபதி குத்தி கொலை appeared first on Dinakaran.

Read Entire Article