ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை - இஸ்ரேல்

3 months ago 25
ஈரானின் தொலைதூர ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேல் விமானப் படைக்கு சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எதிரிகளின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பின்வாங்காது என்றும் உரிய நேரத்தில் தாக்குதலைத் தொடுக்கும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கலாண்ட் தெரிவித்துள்ளார். ஈரான் ஏவிய 3 டிரோன்களையும் மத்திய தரைக் கடல் பகுதியில் இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது. ஈரானின் ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனிடையே இஸ்லாமிக் புரட்சிகர படையான IRGCயின் பிரிகேடர் ஜெனரல் இஸ்மாயில் குவானியைக் காணவில்லை. அவர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் படுகாயம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Read Entire Article