ஈஞ்சம்பாக்கத்தில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்

1 week ago 7

துரைப்பாக்கம்: ஈச்சம்பாக்கத்தில் கலைஞர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, 194 வது(அ) வட்ட திமுக சார்பில் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு 102 மாணவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, 10 மகளிர்களுக்கு தையல் மிஷின், 40 நடைபாதை வியாபாரிகளுக்கு குடை, 950 மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 194 வது (அ) வட்ட செயலாளர் குங்பூ கர்ணா, கவுன்சிலர் விமலா கருணா தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஈஞ்சம்பாக்கத்தில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article