இஸ்ரேல் – லெபனானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு!!

2 hours ago 1

டெல்லி: இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது.பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக, லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த தாக்குதல்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த தலைவர், முக்கிய அதிகாரிகள், உறுப்பினர் என பலரை இஸ்ரேல் அழித்தது. இந்நிலையில், லெபனானைச் சோ்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டார். இந்நிலையில் இஸ்ரேல் – லெபனான் இடையேயான போர் நிறுத்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்த முடிவு பிராந்தியத்தில் தீவிரத்தை குறைக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிரொலிக்கிறது என்று கூறியுள்ளது.

மேலும் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது. விரிவாக்கம், கட்டுப்பாடு மற்றும் உரையாடல் மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்புவதற்கு நாங்கள் எப்போதும் அழைப்பு விடுத்துள்ளோம். இந்த முன்னேற்றங்கள் பரந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேல் – லெபனானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article