இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு டிரோன் தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; 50பேர் படுகாயம்

3 months ago 33

காசா: இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய டிரோன் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, லெபனானின் இஸ்ரேல் நடத்தி வரும் நேரடி தாக்குதலால் டிரோன் தாக்குதலில் இறங்கியுள்ளது. வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம்களில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்களில் 6 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். பொதுமக்களில் 60 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து அங்கு நடத்தப்பட்டுள்ள மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இஸ்ரேல், ஹிஸ்புல்லாவின் தங்கியுள்ள லெபனானில் தனது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. லெபனான் எல்லையில் அந்த நாட்டு பொதுமக்களின் பாதுகாப்பாக இருக்க நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா. சமாதானப்படையினரை உடனே வெளியேறுமாறு ஐ.நா.வை இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

மறுபுறத்தில் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளிக்கும் ஈரான் நேற்று இஸ்ரேலை அமெரிக்கா வாயிலாக கடுமையாக எச்சரித்துள்ளது. தங்களின் நலனை காக்க குறுக்கே எந்த சிவப்பு கோடும் கிடையாது என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய இணையவழி தாக்குதலால் கொதிப்படைந்துள்ள ஈரான், தங்கள் மீது புதிய தாக்குதலை இஸ்ரேல் கட்டவிழ்த்தால் சும்மா இருக்க முடியாது என்று எச்சரித்து இருக்கிறது. மறுபுறத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அனுப்ப போவதாக அறிவித்துள்ள அமெரிக்கா கூடுதல் துடுப்புகளையும் அனுப்பி வைக்க உள்ளது. இதனிடையே காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த முகாம் மற்றும் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் அதிகாலை சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் அல் அக்ஷ மருத்துவமனையில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். மக்களுடனும் ஹமாஸ் படையினரும் தங்கி இருந்ததாலேயே மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் வடக்கு காசாவில் கடுமையான உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனிடையே ஹிஸ்புல்லா அமைப்பின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக தெற்கு லெபனானில் 10க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன.

The post இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு டிரோன் தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; 50பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article